நல்லூர் வாசிகளுக்கு எச்சரிக்கை!

அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீபத்தில் நமது நகரின் ரகுமானியபுரம் பகுதியின் வீடுகளில் உள்ள பெண்களிடம் அடையாளம் தெரியாத சில பெண்களால் விவகாரமான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதை உடனே கண்டுணர்ந்த நல்லுரின் இளைஞர்கள் அந்த பெண்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரித்ததில், பொய்யான தகவல்களை வைத்துகொண்டு கணக்கெடுப்பு என்ற பெயரில் விபரங்கள் சேகரிப்பது தெரியவந்தது. அந்தப்பெண்களின் பெயரில் பழைய புகார்கள் இருப்பதும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

இதன் மூலம் நமதூர் வாசிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இதுபோல் யாராவது தங்கள் வீடுகளில் வந்து விசாரித்தால், முதலில் அவர்கள் யார் எதற்காக விபரங்கள் கேட்கிறார்கள் என்பதை நீங்கள் விசாரிக்கவேண்டும். அவர்கள் சரியான அடையாள அட்டையோ அல்லது வேறு ஏதாவது ப்ரூப் வைத்திருந்தால் தவிர உங்களைப்பற்றிய விபரங்களை கொடுக்காதீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கோ அல்லது ஏதாவது எங்களைப்போன்ற அமைப்புகளுக்கோ தகவல் தெரிவியுங்கள். 

சமூக நலன் கருதி வெளி இடுவோர்
நல்லூர் குட் லாட்ஸ் சோசியல் நெட்வொர்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக