தியாகத் திருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்..

உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தியாகப்பெருநாள் சிந்தனைகள்

சொந்த நலனுக்காகவும் சுய லாபத்திற்காகவும் இவ்வுலகில் செய்யும் முயற்சிகள் யாவும் நிச்சயமாக தியாகமாகாது. தியாகமென்றால் அதற்கொரு லட்சியம் இருக்கவேண்டும். ஒரு உன்னதமான நோக்கம் வேண்டும். அதுவும் நம்மைப்படைத்தவனின் படைப்பின் நோக்கத்தை நிறைவுச்செய்வதற்காக செய்யும் தியாகம்தான் உன்னதமானது.
மனிதகுல வரலாற்றிலேயே அத்தகையதொரு மகத்தான தியாகத்திற்கு சொந்தக்காரர்தான் அல்லாஹ்வின் தூதர் நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள். வல்ல நாயன் அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் தனது நண்பர் என்று கூறுமளவுக்கு தியாகத்திற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். அல்லாஹ் இட்ட கட்டளைகள் அத்தனையையும் அணுவளவும் பிசகாமல் நிறைவேற்றியவர். ஷைத்தானின் தூண்டுதலோ மனோ இச்சையோ அவர்களின் லட்சியத்தை தடுக்கவில்லை. அவர்கள்தான் மாபெரும் ஏகத்துவ புரட்சியாளர். அவர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. அவர்கள்தான் தியாகத்தின் தடாகம்.
அந்த சத்திய சீலரின் வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் இருக்கிறது. அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் குறிப்பிடுகிறான்,
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
இப்ராஹீம் நபி(அலை...) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவே ஹஜ்ஜின் ஒவ்வொருக்கடமைகளும் அமைந்திருக்கின்றன. நாம் தினமும் தொழுகையின்போது அத்தஹியாத்தில் அவர்களுக்கு அல்லாஹ் அருள்ச்செய்ததை நினைவுக்கூறுகிறோம். இவ்வாறு இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு நிலைகளில் இப்ராஹீம்(அலை...) அவர்களை நினைவுகூறும் நாம் அத்தோடு நின்றுவிடாமல் அவர்களின் தியாகத்தையும் ஒரு முன்மாதிரியாகக்கொண்டு அதற்காக தயாராகவேண்டும். நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள் எதிர்கொண்ட நம்ரூத் போன்றக்கொடுங்கோலர்கள் இன்றும் மோடியின் வடிவிலும் ஓல்மர்ட்டின் வடிவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் . காலங்களும் பெயர்களும் தான் மாறுகிறதைத்தவிர கொடூரர்களின் குணங்கள் மாறவில்லை. இவர்கள் நம் முஸ்லிம் உம்மத்தை அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் ஆட்படுத்திவருகிறார்கள். இவர்களிடகிருந்து நம் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்திடவும், வலுப்படுத்தவும், இஸ்லாத்தை நிலை நாட்டிவிடவும் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் இன்றைக்கும் தேவைப்படுகிறது.
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:111)
பெருநாள் கொண்டாடினோம் சிறந்த ஆடைகளை அணிந்தோம், உயர் ரக உணவை உண்டோம் என்றில்லாமல் தியாகத்தின் தாடாகம் நபி இப்ராஹீம்(அலை..) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக்கொண்டு அந்த தாடாகத்திலிருந்து கிளம்பும் ஊற்றுக்களாக மாறுவோம்.
இன்ஷா அல்லாஹ்... 'தகப்பலல்லாஹ் மின்னா வ மின்கும்'

'மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!

 

லக அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது 'மாரடைப்பு!’ -இது பழைய செய்தி என்றாலும், 'இந்தியாவில், மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகளை ஏழைகள்கூட வாங்குவது இல்லை!’ என்ற பேரதிர்ச்சி செய்தியை வாசிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று! இந்தியாவில், யாரும் மாரடைப்புக்கு மருந்து சாப்பிடுவது இல்லையா? அல்லது மலிவு விலை மருந்து கிடைப்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்தாலும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவில்லையா? என பல கேள்விகளைக் கிளப்பியிருக்கிறது இந்த ஆய்வு.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு விகிதம் அதிகம். எனவே, 'ஒருவருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானால், அவருக்கு மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கான சிகிச்சையையும் சேர்த்தே அளிக்க வேண்டும்’ என்கிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்! இதுகுறித்து 'நீரிழிவு மருத்துவ நிபுணர்’ டாக்டர் கருணாநிதியிடம் பேசினோம். ''இந்த ஆய்வின் முடிவு நூற்றுக்கு நூறு சரி! ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை எந்த நோய் வந்தாலும் முதலில், கை மருந்து, அடுத்ததாக மெடிக்கல் ஷாப் என 'தனக்கு தானே மருத்துவம்’ செய்துகொள்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான் சிறப்பு மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதுபோல், நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சை மாதிரியான உச்சகட்ட சிகிச்சை முறைகளைத்தான் செய்தாக வேண்டும். மருத்துவ விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே விலை குறைந்த  மருந்து களால், மாரடைப்பை சரி செய்துவிட முடியும்!'' என்று நம்பிக்கை ஊட்டியவர் தொடர்ந்து, ''பெரும்பாலும் மரபு ரீதியாகவே இந்தியர்களின் ஜீன்களில் கடத்தப்படும் இந்நோய்க்கு அதிகம் பலியாவது ஆண்கள்தான். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனானது மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு உள்ள பெண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய (ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு விடுவதால்) பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கு நிகராகவே இருக்கிறது.
ஒரு குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு வந்தால், பின்னாளில் வாரிசுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாற்பது வயதில், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் குடும்பத் தலைவரை இந்நோய் தாக்கும்போது மனதாலும், மருத்துவச் செலவுகளாலும் ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. மாரடைப்பை சரிசெய்யக்கூடிய அறுவை சிகிச்சை செலவுகள் சாதாரண மருத்துவமனைகளிலேயே லட்சங்களில்தான் ஆரம்பிக்கிறது. எனவே, இந்நோய் பாதிப்பு உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது முப்பது வயதில் இருந்தே வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக 'கொலஸ்ட்ரால் டெஸ்ட்’ (fasting lipid profile) எடுத்துக் கொள்ளவேண்டும். இதில், 'எல்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது 'ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவு குறைவாக இருந்தாலோ உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
 
ரத்தக் கொதிப்பு, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடற்பயிற்சியே செய்யாதவர்கள், அதிக உடல் எடையுடன் கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சியும், டயட் இருப்பதுமே சிறந்த வழி. பெரும் பான்மையானவர்களால் இதனை சரிவரப் பின்பற்ற முடியவில்லை. அதனால்தான் 'STATIN’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்கள். கொழுப்பைக் குறைக்கக்கூடிய இந்த மருந்து பல ரகங்களில், மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனாலும், டாக்டரின் ஆலோசனையின்படி, நல்ல தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துவது பக்க விளைவுகளைக் குறைப்பதோடு, நல்ல பலனையும் கொடுக்கும்.
இந்த 'STATIN’ வகை மருந்துகளைத் தவறாமல் சாப்பிட ஆரம்பித்தால் மாரடைப்பு வராமலே தடுக்கமுடியும். மாரடைப்பு வந்தபிறகும்கூட இதே மருந்தின் அளவை அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது, கொழுப்பின் அளவு நாற்பதில் இருந்து ஐம்பது சதவிகிதம் வரை குறைந்துவிடுவதால், மாரடைப்பு அபாயமும் முற்றிலும் நீங்கிவிடுகிறது.
'க்ரீன் அண்ட் க்ரெய்ன்’ எனப்படும் பச்சைக் காய்கறிகள், பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை மற்றும் பயிறு வகைகள், மோர்.... போன்ற உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. தினமும் அரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி செய்யலாம்; அல்லது உடலுக்கும், மனதுக்கும் தெம்பூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி செய்யலாம்.
மாடிப்படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, எந்திர உதவி இல்லாமல் நாமே வீட்டு வேலைகளை செய்துவருவதும் கொழுப்பைக் குறைக்க உதவும் நல்ல உடற்பயிற்சிகள்'' என்றார் விளக்கமாக.
டாக்டர் சொன்னதையெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஹார்ட் அட்டாக்குக்கு குட்பை சொல்லுங்க!

விடியலை நோக்கியே பயணம்

விடியலை நோக்கியே பயணம் – பிறைமேடை தலையங்கம் – எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
 பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டு அவரவர் பங்கிற்கு மக்களிடத்திலிருந்து முடிவுகளையும் பெற்றிருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று ஆளுங்கட்சிக்கு அபரிமிதமான இடங்கள் கிடைத்து, மக்களின் மனநிலையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாத நிலையில் தமிழகம் இன்னொரு தேர்தலைச் சந்தித்திருப்பதால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்திற்குரியவை அல்ல என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய உண்மை வெளிச்சம் ஒன்று நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த வெளிச்சம் வெளிப்படும் தருணம் விரைவில் தேர்தல் முடிவுகளாகத் தென்படும் என்று �பிறைமேடை� இதழின் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். அது என்ன?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அதிகமாக, இன்னும் சொல்லப் போனால் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாழக்கூடியவை. அவை இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரப் பெருமை கொண்ட பகுதிகள். காலம், காலமாக முஸ்லிம் சமுதாயப் பிரமுகர்களில் யாரேனும் ஒருவர்தான் அந்த நகராட்சியின், அல்லது பேரூராட்சியின் அல்லது ஊராட்சியின் தலைவராக இருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுபோன்ற பல பகுதிகளில் நம்முடைய மார்க்க ஒழுக்க நிலைகளைக் காப்பாற்றி, பேண முடியுமா? என்கிற கேள்விகள் எழக்கூடிய அளவுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்கள், சில இடங்களில் முஸ்லிம் விரோத அரசியல் நடத்துவோர்கூட பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஜனநாயக ரீதியில் நம்முடைய வாழ்த்துக்களைச் சொன்னாலும், சட்டரீதியாக எந்தக் குறையும் சொல்ல முடியாது என்றாலும், இத்தகைய விபத்துகளுக்கு என்ன காரணம் என்பதை மட்டும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. அது என்ன? நம்மவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நம்மை தலைமையேற்று வழிநடத்தி அப்பகுதி மக்களுக்கு அதிக சேவைகள் புரியும் நல்ல குணநலன் உள்ள ஒருவரை ஜமாஅத் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்து, ஒருவேளை போட்டி இல்லாமல் ஆகிவிட்டால் சிறந்தது; இல்லையானால் போட்டியிலும் களம் இறக்கச் செய்து நிச்சயமாக வெற்றியைப் பெற்றாக வேண்டும். இதுதான் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான செயல்முறையாக இருக்க முடியும். இந்த மையக் கருத்தை முன்வைத்துதான் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தலைமை ஒரு தெளிவான முடிவை அறிவித்தது.
��உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்யும் வேட்பாளர்களை ஜமாஅத்துடன் கலந்து பேசி, முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட்டு ஜமாஅத் அமைப்புகளின் ஆதரவோடு இணங்கி செயலாற்றி நம் சமுதாயத்தவர்களின் வெற்றி வாய்ப்பினை நழுவவிடாமல் நல்ல முடிவுகளைப் பெற வேண்டும்�� என்பதுதான். அதன்படி ஒத்துவந்த பகுதிகளிளெல்லாம் நம்முடைய சமுதாயப் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற நல்ல செய்திகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் ஒத்துப் போகாத பல இடங்களில் நாம் எண்ணியபடியே உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகளை மற்றவர்களுக்குத் தாரை வார்த்திருக்கிறோம். இதுதான் வேதனையின் உச்ச நிலையாக இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கும் படிப்பினை.
நம் சமுதாயத்தின் கட்டமைப்பு என்பது ஜமாஅத் ஒன்றுதான். அந்த ஜமாஅத் ஐக்கியத்தில் உள்ளவர்கள் எந்த அமைப்பு, எந்த கட்சி, எந்த இயக்கம் என்று பாராமல் சமுதாயம் என்கிற சமுத்திரத்தில் சங்கமம் ஆகவேண்டும் என்பதே முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். இஸ்லாமும் அதைத் தானே சொல்கிறது. நம்மில் அந்த மனநிலை உருவாகாத காரணத்தால் நம்மை மற்றவர்கள் ஆளுகிற மற்றும் ஆட்டிப் படைக்கிற காட்சிகள் ஆங்காங்கே அரங்கேறுகிற நிலையினைப் பார்க்கிறோம்.
ஒரே ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிதான் எனது சொந்த ஊர். சென்ற ரமளான் மாதத்தில் ஊருக்குச் சென்றபோது அனைத்து ஜமாஅத்துகளும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் பேசுகிறபோது ��நமக்குள் போட்டியில்லாமல் ஒருமித்த கருத்தொன்றை உருவாக்கி ஒருவரை மட்டும் களத்தில் போட்டியாளராக ஆக்குங்கள்; அத்தகைய ஒருமித்த கருத்து உருவாகவில்லையெனில் களம் காணவிரும்புவோரின் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, நமக்குள் ஒத்துப்போய் தேர்தல் களத்தைச் சந்தித்தால் நமக்குத் தலைமையேற்று நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவராகப் பணிசெய்யும் ஒருவரை மிக எளிதாகத் தேர்ந்தெடுத்துவிடலாம். தேர்தல் நாள் வரையிலும், தேர்தல் முடிவு வரும் வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இத்தகைய அறிவுப்பூர்வமான, தார்மீக அடிப்படையிலான, பெருந்தன்மைமிக்க செயல்முறையைத் தட்டிக் கழித்தால் நம்மில் ஆளுக்கொரு முடிவெடுத்து பல எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களம் கண்டு, நமது வாக்குகளெல்லாம் பலருக்கும் சிதறிப்போய் நம்மில் யாருக்கும் பலன் இல்லாமல் மற்ற ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று இதயப்பூர்வமாக எச்சரித்தும் குறிப்பிட்டேன்.
அதற்கு ஒரு உதாரணமாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதியில் 65 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருந்தும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்தவர்; காரணம் நம்மில் போட்டியாளர்களாக 15 பேர் களம் கண்டார்கள்; மற்றவர்களில் பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்த ஒருவர் மட்டும்தான் போட்டியில். அதனால் நம்மவர்களின் வாக்குகள் சிதறிப் போய் ��யார் வரக்கூடாது�� என்று சொல்லி நாம் எல்லோரும் பிரச்சாரம் செய்தோமோ அவரையே மறைமுகமாக வெற்றிபெறச் செய்துவிட்டோம்�� என்கிற நிகழ்வினை நினைவூட்டி இதுபோன்ற ஒரு நிலை நமதூருக்கு வந்துவிடக் கூடாது என்று விளக்கமாக எடுத்துரைத்தேன். கேட்டபாடில்லை.
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்குப் போட்டியிட்ட நம்மவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒன்பது பேர். முடிவு என்ன தெரியுமா?
இந்த பேரூராட்சிப் பகுதியின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களுக்குத் தலைவர் திரு. அருணாச்சலம் அவர்கள். நாம் அருணாச்சலத்தைக் குறை சொல்லவில்லை. அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால், நாம் எப்போது நம்முடைய பலவீனத்தை உணர்ந்து பலத்தை நிரூபிக்கப் போகிறோம்?
சமுதாயத்தில் அமைப்புகளும், இயக்கங்களும் பல்வேறு பெயர்களில் இருந்தாலும் அரசியலில் ஒன்றுபட்டு, ஒரு தலைமையில் நின்றுவிட்டால் நம்மை மீறி வெற்றிகள் எங்கே போய்விடும்?
முஸ்லிம் லீக் பேரியக்கம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த விடியலை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம்.
வல்ல இறைவன் துணைபுரிவானாக!
இன்ஷா அல்லாஹ்.

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்!!!

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.
குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப்
போட்டது.
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்.
“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல; அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)
என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!” (16:98)
என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.
அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.

லிபியா சொல்லும் சேதி!

தோழர் பஷீர், பொறியாளர்- லிபியாவிலிருந்து திரும்பியவர்
நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!
இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்!
சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.
அனைவரிடம் பேசினான்! மன வலிமையையும் புத்திக் கூர்மையையும் பிரயோகித்து இரத்தம் சிந்தாமல் ஒரு தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
அறிவித்த நாள் செப்டம்பர் 01,1969,
அந்த தேசத்தின் பெயர்: லிபியா,
அந்த மாவீரனின் பெயர் : முஅம்மார் கடாஃபி.
மரியாதைக்குரிய கடாஃபி அவர்களின் வரலாற்றை நான் எழுதவில்லை. நிறைகளும், சாதனைகளும், வீரமும் மிகுந்த அந்த மனிதனிடம், குறைகளும், பிழைகளும் இருந்தன. அதனால்தான் அவர் சறுக்கிக் கொண்டிருந்தார். இன்று மார்ச் 01-2011 கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில், விளிம்பில் நிற்கிறார் அந்த மாவீரர். “மாவோ’வை வாசித்த இந்த மனிதர் ஏன் “உமரை’ மறந்தார்? இதுதான் எனது சந்தேகம்! என்ன செய்வது? பிழை செய்தால் விலை கொடுப்பது என்பதுதானே வரலாறு.
கடாஃபி என்னென்ன செய்து தன் தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? என்னென்ன விசயத்தில் கட்டுப்பாட்டை இழந்தார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்!
மது, மாது, சூது இல்லாத அற்புத தேசம் லிபியா!
மதுக் கடைகள் திறந்தால்தான் அரசின் கஜானா பெருகும் என்று பல நாடுகள் பட்ஜெட் தயாரிக்கிறார்கள். ஆனால் லிபியாவில் மதுவும் கிடையாது, மதுக்கடையும் கிடையாது.
பாவங்களின் தாய் எனப்படும்
மதுவையும் ஒழித்து, பெரும்பாவங்களில் முக்கியமான விபச்சாரத்தையும் இல்லாமல் வைத்திருந்தது கடாஃபியின் சாதனை என்றால் மிகையாகாது.
அது போலவே பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களே கிடையாது.

பெரும்பாலான ஊர்களில் (நவீன அடுக்கு மாடி வீடுகள் தவிர) அனைத்து வீடுகளிலும் (காம்பவுண்ட்) மதில் சுவர் 8 அடி முதல் 10 அடி உயரம் வரை இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களை அந்நியர் யாரும் வெளியிலிருந்து நோட்டம் விட முடியாத நல்ல சிஸ்டம், முஸ்லிம் அல்லாதவர்கள் இதனை “”பெண்கள் கொடுமை” என்பார்கள். அதே சமயம் தனது சகோதரியோ, தாயோ, மகளோ, அடுத்தவன் கண்களால் மேயப்படுவதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனைத்தானே கடாஃபியின் அரசு கண்காணித்து வந்தது!
எல்லாம் நன்றாகத்தானே போய்க் கொண் டிருக்கிறது. எங்கே கடாஃபி இடறினார்? ஏன் இந்த மாவீரர் இன்று பலமிழந்து நிற்கிறார்?
அவரின் குறைகளை படிக்குமுன் அவரது அரசு குடிமக்களுக்கு என்ன செய்தது என கொஞ்சம் பார்ப்போமா?
கடாஃபி அவர்கள் எந்த மாட மாளிகையிலும், பங்களாவிலும் இன்று வரை வசித்ததில்லை. “ராணுவ டெண்ட்’ எனப்படும் கூடாரம் தான் அவரது வீடு. இன்றுவரை அவர் பேணிவரும் அவரது எளிமைதான் 40 வருடமாக மக்கள் மனதில் இருக்கிறது.
மத்திய தரைக்கடல் கடற்கரைதான் லிபியாவின் மேற்கு எல்லை. கிரிஸ், இத்தாலி எல்லாம் கைக்கெட்டும் தூரம். தெற்கில் இருந்து அடிக்கடி வீசும் சஹாரா மணல் புழுதிக் காற்று மட்டும் இல்லையென்றால், லிபியாவை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
அப்படிப்பட்ட பூகோள அமைப்பு!
2010-ல் பெங்காசி நகருக்கு அருகில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால் பல அனுபவங்களை நேரில் அறியக்கூடிய வாய்ப்பு இறையருளால் கிட்டியது. பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் உல்லாச விடுதிகள் கட்டுவதுதான் எல்லா நாடுகளும் செய்கின்றன. கடாஃபிக்கு இதில் உடன்பாடு இல்லை. அது மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வழிவிடும் என்று எச்சரித்தார்.
கடற்கரையில் ஆண்கள் அமர தனி பகுதி! பெண்களுக்கு தனி பகுதி! குடும்பமாக அமர வேண்டுமா? அதற்கும் தனி பகுதி! இதெல்லாம் கடாஃபியின் ஒழுக்க மேம்பாட்டு திட்டங்களுக்கு உதாரணங்கள்!
கடற்கரைக்கு வந்து தங்கி அடுத்தவர் வீட்டு பெண்களை ரசிக்கும் மனோநிலை உள்ள சுற்றுலா பயணிகள் லிபியாவை பற்றி “What a hell” என்று சபிப்பார்கள்!
லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாஃபியின் பலமும், பலவீனமும். இது மனித இயல்பும் கூட. கை நிறைய காசிருந்தால் உழைத்து சாப்பிட மனம் அவ்வளவாக முன்வராது! கடாஃபி எண்ணெய் வளத்தை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார். “”இருக்கிறது” எல்லோரும் சாப்பிடுங்கள் என்று சொல்லி நாடு முழுவதும் மாதா மாதம் உதவித் தொகைகள் குடும்பங்களை தேடி வந்தன.
வேலைக்கு போகாமல் சாப்பிடும் மனோ நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. இது மக்களின் நிலை. அதை நாடி பிடித்து தலைவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய “”அதிகார வட்டம்” தலைவருக்கு ஜால்ரா அடித்து, புறங்கையில் வடிந்த தேனை நக்கியது, அதனால் அடித்தட்டு மக்கள் மேலும் மேலும் கீழ்நிலையிலேயே இருந்தார்கள்.
லிபியா வரலாறு கொஞ்சம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல! வரலாற்றின் பக்கங்களிலும் முக்கிய இடம் உண்டு. பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரம் லிபியாவில்தான் உள்ளது. பெயர்: சைரின், சிதைந்து போன அடையாளங்களுடன் கூடிய அந்த வரலாற்று சிறப்புமிக்க நகரை இன்றும் காணலாம்.
முழு அரபுலகத்திற்கும் அவதார புருஷனாக வரவேண்டும் என நிறையக் கனவு உண்டு அவருக்கு! அதனால்தானோ, என்னவோ, அடிக்கடி அமெரிக்காவை சாடுவதும், திட்டுவதும் அவரது வழக்கமான பாணியாகவே இருந்தது. அதே சமயம் இந்த பேச்சு தம் தேசத்து மக்களிடம் தனக்கு மதிப்பையும் உயர்த்தி தந்து கொண்டே இருந்தது!
ஆனால் எந்த அரபு நாடும் கடாஃபியை தலைவர் என்றோ, குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் என்றோ கூட கருதியதில்லை. கடாஃபியும் தன் நாட்டை இஸ்லாமிய நாடு என்று இன்று வரை கூறியதே இல்லை! முஸ்லிம் நாடு என்றுதான் கூறுவார்.
2008ல் ஆப்பிரிக்காவில் உள்ள சுமார் 200 மன்னர்களை அழைத்து விருந்து போட்டு, தன்னை “KING OF KINGS” என்று சொல்ல வைத்தார். சமீப காலமாக நல் உறவாடி வந்த மேற்குலகம் கடாஃபியை சந்தேதிக்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்றால் “United States of Africa” என்று கடாஃபி வலியுறுத்தியதாக கூட இருக்கலாம்.
கடந்த காலங்களில் அமெரிக்காவால் பல தடவை லிபியா குறி வைக்கப்பட்டது. பிற காரணங்களால் அவை தள்ளி போயின. அது ஆப்கானாக இருக்கலாம் அல்லது சதாமாக இருக்கலாம்.
கடாஃபி இஸ்ரேலுக்கு எதிராக PLO விற்கு நிறைய உதவி செய்து ஆதாரித்தார். பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பது கடாஃபிக்கு காப்பி குடிப்பது போல. இதன் விளைவை 1986ல் சந்திக்க ஆரம்பித்தது லிபியா நாடு. பெர்லினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் இரண்டு பேர் பலியானதற்கு கடாஃபிதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. திரிபோலி, பெங்காசி நகர்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசி 60 பேரை கொன்றது. இந்த தாக்குதலில் கடாஃபியின் வளர்ப்பு மகள் பலியானார். (கடாஃபிக்கு 1மகள் + 8 மகன்கள்)
அடுத்தடுத்து ஸ்காட்லாந்து ட்சாட் நாடுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் கடாஃபிக்கும் தொடர்பு உண்டு என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் எந்த உலக நாட்டு உதவியும் இல்லாமல், உலக வங்கியிடமும் சொல்லாமல் உள்நாட்டில் மிகப்பெரிய வேலை ஒன்றை செய்தார் கடாஃபி. அதாவது பெரும்பகுதி பாலைவனம்.
லிபியா மொத்த பரப்பளவு : 1759540 Km2 (தமிழ் நாட்டைப் போல 14 மடங்கு கூடுதல் பரப்பளவு)
உணவுத் தேவைக்கு உயிர்நாடி விவசாயம்; விவசாயத்துக்கு தேவை தண்ணீர். நம்மிடம் எண்ணெய் வளம் உள்ளது. ஆறுகளே கிடையாது. இருக்கும் பணத்தைக் கொண்டு அடுத்த நாட்டில் கையேந்தாமல் சொந்த மண்ணில் பாலைவனக் காடுகளில் நீர்நிலை ஆதாரங்களை கண்டுபிடித்து ராட்சத போர் போட்டார். செயற்கை ஆறை உருவாக்கினார்.
Man Made River என்று பெயர் (GMRA Project) எண்ணெய் வள நாடுகளில் பெரிய பெரிய Projects செய்யும் Brown & Root நிறுவனம் டிசைன் செய்து தென்கொரிய கம்பெனி உதவியால் பாலைவன மணலைக் கிழித்து, ராட்சத பைப்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 6000 கி.மீ. நீள இந்த ஆற்றின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. கட்டிடப் பொறியியல் துறை வல்லுனர்கள் உலகளவில் இந்த ஆற்றிற்கு சூட்டிய பெயர் “எட்டாவது உலக அதிசயம்’ (8th Wonder of the World)
அமெரிக்கா கூட்டிக் கழித்துப் பார்த்தது. கடாஃபியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இல்லையயன்றால் ஆபத்து என்று நினைத்திருக்க வேண்டும்.
ஆனால் கடாஃபி அமெரிக்காவை திட்டுவார், இஸ்ரேலை திட்டுவார், அவ்வளவுதான் தன் நாட்டைவிட்டு எங்கும் போகமாட்டார். இருப்பினும் லிபியாவின் வளர்ச்சி அமெரிக்காவை கவலை கொள்ள வைத்தது. 1990களில் லிபியா மீது பொருளாதார தடை. பல்வேறு நெருக்கடிகள் லிபியா மீது. கடைசியில் இரண்டு லிபிய கைதிகளை ஒப்படைத்தால் பரிகாரம் உண்டு என்று அமெரிக்கா கூறி கடாஃபியை நிர்பந்தித்தது. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட லிபியர்களை ஒப்படைத்தார். (அந்த குடும்பங்களுக்கு $ 2.7 பில்லியன் கொடுத்து உதவினார் என்று சொல்கிறார்கள்)
வழக்கம்போல இரசாயன ஆயுத கிடங்கு லிபியாவில் உள்ளது என்று கூட பென்டகன் குற்றம் சாட்டியது. கடைசியில் அதெல்லாம் வீட்டு மனை கட்டிட வேலைகள்! வயதிற்கு வந்த ஆண்/பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் (அல்லது) தாமதித்தால் குழப்பம் விளையும் என்று நபி(ஸல்) சொன்ன ஹதீஸ் இருப்பதாக பயானில் கேட்டதுண்டு!
தமிழ்நாட்டு ஒரு பாமர முஸ்லிமாகிய என் காதில் விழுந்த இந்த பொன்மொழி எப்படி அரபியான கடாஃபியின் செவிகளை தொடவில்லை?
கலீஃபா உமர்(ரழி) அவர்களின் நாட்களில் அம்ர் இப்னுஅல்ஆஸ்(ரழி) அவர்களின் மேற் பார்வையில் வட ஆப்பிரிக்கா முழுவதும் இஸ்லாம் பரவியதாக வரலாற்றில் படித்ததுண்டு.
கலீஃபா உமர் அவர்கள் இரவில் மாறு வேடம் பூண்டு தன் தேசத்தில் உள்ள கீழ்நிலை மக்களின் பொருளாதார நிலைகளை தானே கண்டதை ஏன் கடாஃபி மறந்தாரோ, தெரியவில்லை. விளிம்பு நிலை சமூகம், ஏழை சமூகம் பரவலாக லிபியா முழுவதும் உள்ளார்கள். குறிப்பாக “மஹர்’ விசயத்தில் பெண்கள் போதிய வழிகாட்டுதல் இல்லாததாலோ என்னவோ, சொந்த வீடு இல்லாத ஆண்களுக்கு அவ்வளவு சுலபமாக திருமணம் நடந்துவிடாது. 35, 40 வயது வரை ஆண்கள் திருமணம் முடிக்காமல் உள்ளனர்.
இந்த விஷயம் “நாட்டின் தலைவர்’ என்ற முறையில் கடாஃபி தீர்வு காணாத வரலாற்றுத் தவறு என்று நான் கூற விரும்புகிறேன்.
இரண்டாவது வரலாற்று தவறு என்னவென்றால் 1980, 1990களில் உலகம் முழுவதும் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. தொழில் நுட்பம், கல்வியியல், கணினி என்று புதிய தலைமுறை தலையெடுக்கும்போது, கடாஃபி 1960களில் தான் எழுதிய Green Book விலிருந்து வெளியே வராதது கடாஃபி செய்த பெரும் பிழை. அதன் விலை 2011 பிப்ரவரி 17ல் வெடிக்க ஆரம்பித்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, போதை வஸ்துக்களான பீர், பிராந்தி விஸ்கியை என்னவென்றே தெரியாத லிபிய இளைஞர்கள் மத்தியில் இலை மறைவு காய் மறைவாக கடந்த ஆண்டுகளில் போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துள்ளன. 35,40 வயது வரை திருமணம் ஆகாத இளைய தலைமுறை இந்த சாத்தானிய வலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதேபோல விபச்சாரம் கடந்த சில ஆண்டுகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த சமூக பிரச்சினையை நேர்மையாக சிந்தித்துத் தீர்ப்பதுதான் பொறுப்புள்ள தலைமையின் பணி. இதை விட்டுவிட்டு இது என் மக்களை வழிகெடுக்க அந்நிய நாட்டின் சதி என்பதெல்லாம் சும்மா வெட்டிப் பேச்சு.
எது எப்படியோ எல்லா நாட்டிலுமே அரசாங்கத்தை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தலைமையை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் எது சாக்கு என்று காத்திருப்பார்கள்! அவர்கள் யார் தூண்டினாலும் சிக்குவார்கள் சதி செய்ய! அப்படிப்பட்ட கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது.
அவர்களிடம் கீழ்காணும் அம்சங்கள் காட்டப்பட்டிருக்கலாம்.
1. கடாஃபியின் மகன்களை பார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலாகா மந்திரி; உன்னைப் பார், நீ ரொட்டிக்கே அல்லாடுகிறாய்.
2. எல்லா நாட்டிலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். உனக்கோ அரபியே அரைகுறை! உன் சந்ததி எப்படி உருவாகும் இப்படி இருந்தால்?
3. பக்கத்து நாடுகளைப் பார்! பாரிசைப் பார்! ரோமைப் பார்! மால்டாவைப் பார்! அட பக்கத்திலுள்ள கெய்ரோவைப் பார்! எவ்வளவு சுதந்திரம்! அப்பப்பா.
உன் தலைவிதி இப்படியா?
4. கடந்த காலங்களில் இதையயல்லாம் பல நண்பர்கள் பேசினார்கள்! அவர்கள் எல்லாமே இன்று சிறைகளில்! அல்லது கப்ரில்!
எப்பொழுது விடியல்?
இப்படித்தான் லிபியா மட்டுமல்ல, அரபு தேசம் முழுவதும் கலகக் குரல்கள் விதைக்கப்படுகின்றன. கலகக்காரர்கள் தங்களை போராட்டக்காரர்கள் என்கிறார்கள். அல்ஜசீரா சுடச் சுட சேதி சொல்வதில் குறியாக உள்ளது.
BBC யும், CNN ம் அந்த போராட்டக்காரர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக காண்பிக்கிறது. எல்லா நாடும் வேடிக்கை பார்க்கிறார்கள்! எல்லா எண்ணெய் நாடுகளிலும் சம்பாதித்தார்கள். இன்றோ யாரும் தீர்வு பற்றி பேசுவதே இல்லை.
01.03.2011 இன்று அமெரிக்க போர்க்கப்பல் லிபியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று சர்வதேச கோர்ட்டில், கடாஃபி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முந்தா நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கள் எப்படிக் கவனமாக நகர்த்தப்படுகிறது என்பதை கவனித்தால் ஒன்று புரிகிறது. கடந்த காலங்களில், ஈராக்கில், ஆப்கானில் எல்லாம் நிறைய செலவு செய்து, உயிர் இழப்பு செய்து கைப்பற்றிய ஃபார்மூலாவை மாற்றி உள்ளூரில் உள்ள கலகக்காரர்களை கொஞ்சம் உசுப்பேத்தி போராட வைத்தால் போதும்.
ரீகன், புஷ். கிளிண்டன் ஃபார்மூலாக்கள் போய் ஒபாமா ஃபார்மூலா வந்துள்ளது. காரியம் முடிய கனவில் உள்ளார்கள். இறைவனின் கணக்கு வேறாக இருக்கும் என்பதே எமது துஆவாகும்.
May 31-2002-_ Indian Express-ல் வந்த செய்தி:
இந்தியாவிலிருந்து ஒரு குழு லிபியா போய் கடாஃபியை நேரில் பார்த்து பேசியது. பூரி சங்கராச்சாரியர், மெளலான ஆஸாத் மதனி, தலித் தலைவர் உதித்ராஜ் மற்றும் பல அறிஞர்கள் தலைவர்களுடன் சில தேவ்பந்த் உலமாக்களும் அந்த குழுவில் அடக்கம்.
அவர்களிடம் கடாஃபி சொன்ன சேதி இதுதான். அமெரிக்கா கடந்த காலத்தில் ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க விரும்புகிறது.
இந்த சதித் திட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விழுந்து விட்டது எப்படி?
மேலும் கடாஃபி கூறினார், கடவுளின் பெயரைக் கூறி சமுதாயத்தில் சண்டை மூட்டுவது (Dividing people in His name) மோசமான பாவம்.
நிறைவாக கடாஃபி சொன்னாராம்,
“நான் இந்தியா வந்தால், அனைத்து மக்களையும் அழைத்து அமைதி வேண்டி தொழுகை நடத்துவேன்’.
மீடியாக்களில் கொடுங்கோலனாக சித்தரிக்கப்படும் கடாஃபியின் மென்மையான உன்னதமான உள்ளம் உண்மையானது.
என்ன செய்வது, இன்றோ பலர் அந்த கடாஃபிக்கு “ஜனஸா தொழுகை’ எப்படி எங்கே நடத்துவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
இறைவன் மகா பெரியவன்! கருணையாளன்!

அன்னா பற்றி அருந்ததி ராய்

நாம் சமீபத்தில் தொலைகாட்சியில் பார்த்தது தான் புரட்சி என்றால், அது சமீப கால வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், அறியாமையில் உருவான முடிவுமாகவே இருக்கும். ஜன லோக்பால் மசோதா குறித்த உங்கள் கேள்வி எதுவாயினும், அதற்குரிய பதில்களை கீழே தரப்பட்டுள்ளவைற்றில் இருந்தே தேர்தெடுக்க வேண்டும். அவை அ) வந்தே மாதரம் ஆ) பாரத் மாதா கி ஜே இ) இந்தியாவே அன்னா, அன்னாவே இந்தியா ஈ) ஜெய் ஹிந்த்.
முற்றிலும் வேறுபட்ட காரணங்களோடும், முற்றிலும் வேறுபட்ட வழிமுறைகளிலும் நட்த்தப்படும் மாவோயிஸப் போராட்டத்துக்கும், ஜன லோக்பால் மசோதாவுக்கும் ஒரு பொது நிலை இருக்கிறது – இரண்டும் இந்திய அரசை தூக்கிலேறிய தீர்மானித்திருப்பதில் இணைகின்றன. ஒன்று கீழிருந்து மேலாக, ஆயுதப் போராட்ட முறையில், ஆதிவாசி மக்களை ராணுவமயப்படுத்தி, ஏழையிலும் ஏழ்மையான மக்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இன்னொன்று, மேலிருந்து கீழாக, இரத்தமற்ற காந்திய கவிழ்ப்பு முறையில் புதிய அவதாரம் எடுத்த துறவி ஒருவர் தலைமையில் நடத்தப்படுகிறது. அதன் படையாக நகரம் சார்ந்த, வசதி வாய்ப்பு உத்தரவாதம் பெற்ற மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். (இதனுடன் அரசு முடிந்த மட்டும் இணைந்து தனக்கு தானே குழி பறிக்கிறது)
2011 ஏப்ரலில், அன்னா ஹாசரே முதலில் ‘சாகும் வரை உண்ணா நிலை’ போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே பேச்சுவார்த்தைக்கு அழைத்து , சிற்பல காரணங்களால் சில மாதங்கள் சென்ற பிறகு, அரசு அதன் முயற்சியைக் கைவிட்டு, தான் தயாரித்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த்து. அதனை ஏற்க முடியாது என்று அறிவித்த ‘குழு அன்னா’.ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலையில், தனது இரண்டாவது ‘சாகும் வரை உண்ணா நிலை’ போராட்ட்த்தை அறிவித்தார் அன்னா. ஒரு சட்ட மீறலை அவர் செய்யும் முன்னரே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த ‘இரண்டாம் சுதந்திரப் போர்’ ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அன்னா விடுதலையானார்.
ஆனால் சிறையிலிருந்து சிறப்பு விருந்தினராக அமர்ந்து, அங்கேயே ஒரு உண்ணா விரதத்தை, பொது இடத்தில் உண்ணாவிரதம் நடத்தும் உரிமைக்காக ஆரம்பித்தார். மூன்று நாட்கள், மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் வெளியே ஆக்ரமித்து நிற்க, குழு அன்னா உறுப்பினர்கள் உள்ளேயும், வெளியுமாக பறந்து கொண்டிருந்தார்கள் தேசிய ஊடகங்களுக்கு தீனி போட, அன்னாவினுடைய வீடியோ செய்திகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். (வேறெந்த மனிதருக்கு இந்த டாம்பீகம் வழங்கப்படும்? சொல்லுங்கள்.) இன்னொரு பக்கம், டெல்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள், 15 லாரிகளுடன், 6 மண் சீராக்கும் வண்டிகளுடன் ஓய்வு ஓமிச்சலின்றி 24 மணி நேரமும், சேறு நிறைந்த ராம்லீலா மைதானத்தில் இந்த வார இறுதி நாளைய காட்சி கொண்டாட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மிகவும் எதிர்பார்த்த பஜனை கூட்டமும், கிரேன் உயரத்தில் கேமிராக்களும் பார்க்க, இந்தியாவின் திறமை வாய்ந்த மருத்துவர்களின் கண்காணிப்புடன் அன்னாவின் மூன்றாவது கட்ட சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது, ‘ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ என டி.வி வருணனையாளர்கள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்னா ஹசாரேவின் வழிமுறை வேண்டுமானால் காந்திய முறைப்படி இருக்கலாம். அவருடைய கோரிக்கைகள் நிச்சியமாக காந்தியம் இல்லை. காந்தியம் கொள்கைகள் அதிகாரப் பரவலாக்கத்தை பேசுபவை. ஊழலை ஒழிக்க இந்த சட்டம் பயன்படுமா? பயன்படாதா? என்பது ஊழல் முறைகேடுகள் குறித்த நமது சமூகப் புரிதலை அடிப்படையாக கொண்டுள்ளது. ஊழல் வெறுமனே ஒரு சட்டநுணுக்கப் பிரச்சனையா? நிதி நிர்வாகச் சீர்கேடா? லஞ்சமா? அல்லது ஏற்றத்தாழ்வு புரையோடிய சமூகத்தில், சமூகப் பரிவர்த்தனையின் ஒரு அங்கமா? அதிகாரம் மேலும் மேலும் கெட்டித்திரள, ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறு குழு இதனை செய்கிறதா? உதாரணத்திற்கு, பெரிய ஷாப்பிங் மால்கள் இருக்கும் ஒரு மாநகரத்தை எடுத்துக் கொள்வோம். வீதி வியாபாரிகள் அங்கு தடை செய்யப் படுகிறார்கள். ஒரு சிறு லோக்கல் போலீசுக்கும், நகராட்சி அலுவலருக்கும் சிறிய தொகையை கப்பமாக செலுத்தி தனது பொருட்களை விற்கிறார்கள். ஷாப்பிங் மால் சென்று வாங்க இயலாத ஏழை மக்கள் அவரை பயன்படுத்தி கொள்கிறார்கள். இது என்ன பெரிய கொடுஞ் செயலா? எதிர்காலத்தில் பகுதி லோக்பால் பிரதிநிதிக்கும் இந்த கப்பத்தை அந்த ஏழை வியாபாரி செலுத்த வேண்டுமா? அடித்தட்டு மக்கள் அவதியுறும் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வை களைவதில் இருக்கிறதா? அல்லது இன்னொரு அதிகார அமைப்பை ஏற்படுத்தி மக்களை இன்றும் அன்னியப்படுத்துவதில் இருக்கிறதா?
இன்னொரு புறத்தில், அன்னா புரட்சியின் முழக்கங்கள், சைகைகள், நடன அசைவுகள், வெறியூட்டப்பட்ட தேசியவாதம் மற்றும் கொடி அசைத்தல் யாவும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம், உலக்க கோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை கொண்டாட்டங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. அனாவின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கவில்லையெனில் நாம் ‘உண்மையான இந்தியரில்லை’ என்பதை உணர்த்தும் சமிக்ஞைகளை இது கொண்டுள்ளது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் இந்த நாட்டின் வேறெந்த செய்தியும் தமக்கு முக்கியமல்ல என்று முடிவெடுத்து உள்ளன போலும்.
இந்த உண்ணாநிலைப் போராட்டம், மணிப்பூரில், ஒருவரை சந்தேகப்பட்டாலே ராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரம் ஷர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இப்போது, வலுக்கட்டாயமான முறையில் உணவு குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது)கூடங்குளம் அணு உழைக்கு எதிராக பத்தாயிரம் கிராம மக்கள் நடத்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போன்றாதுமல்ல.ராம்லீலா மைதானத்தில் அணிதிரண்டு இருக்கும் ’மக்கள்’ ஜரம் ஷர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வலையைக் கொண்டவர்கள் அல்லர்; ஜகத்சிங்பூர், கலிங்கா நகர் , நியாம்கிரி, பஸ்தார், ஜெய்தாபூர் போன்ற இடங்களில் போலீசையும், சுரங்க கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் மக்கள் அல்லர், இவர்கள். போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோரோ, நர்மதா அணை கட்டுமானத்திற்காக வெளியேற்றப்பட்ட மக்களோ அல்லார், இவர்கள். செய்டா, பூனே, அரியானா மற்றும் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தனது நிலத்தைப் பறிக்கும், வன்செயலுக்கு எதிராகப் போராடும் விவசாய மக்களும் அல்லது, இவர்கள்.
‘இந்த மக்கள்’ ஒரு ரசிகர் பட்டாளம். 74 வயதான மனிதர் ஒருவர் தான் முன்வைக்கும் ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செது சட்டமாக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து உயிரை மாய்ப்பதாக மிரட்டுவதை கண்குளிர பார்க்க கோடி கண்களுடன் வந்திருக்கும் ஒரு கூட்டம். இயேசு கிறிஸ்து மீன்களையும், அப்பத்தையும் தொட்டு பல்கி பெருகச் செய்து பசித்தவர்களுக்கு உணவளித்தது போல ஆயிரக்கணக்கில் திரண்டவர்களை அற்புதம் செய்து லட்சக்கணக்கில் மாற்றின நமது தொலைக்காட்சி ஊடகங்கள், ‘கோடிக்கணக்கான உள்ளங்கள் உதடு திறந்து இந்தியாவே அன்னா என்று உரைத்தன’ என்றார்கள்.
யார் இவர், உண்மையில்? இந்த புது துறவி மக்களுடைய குரலா? உடனடி தீர்வுக்கு ஏங்கி நிற்கும் மக்கள் பிரச்சினைகள் எதன் மீதும் கருத்து தெரிவிக்காதவர். தனது அருகில் நிகழும் விவசாயிகள் தற்கொலையிலிர்ந்து தொலைவில் நடக்கும் ‘ஆப்ரேசன் கிரீன் ஹண்ட்’ வரையிலும் எதற்கும் வாய் திறந்த்தில்லை. மத்திய இந்தியாவின் வனப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் இந்திய அரசின் நோக்கம் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கரையில்லாத மனிதர், இவர். ஆனால் ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான மராட்டியம் மராட்டியவர்க்கே முழக்கத்தை ஆதரிக்கிறார். குஜராத்தின் ‘வளர்ச்சி மாநிலம்’ பாராட்டியவர், 2002-ல் முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. (அன்னா தனது பாராட்டு அறிக்கையை எதிர்ப்புக்கு பிறகு திரும்பப் பெற்றார் எனினும், பாராட்டு மனநிலையை மாற்றவில்லை)
இத்தனை அன்னா ஆரவாரத்துக்கு நடுவிலும், சில நேர்மையான இதழாளர்கள் தமது கடமையை செய்ய மறக்கவில்லை. கடந்த காலத்தில் அன்னா RSS- உடன் கொண்டிருந்த உறவு அம்பலமாகியிருக்கிறது. அன்னாவின் கிராமமான ரலேகான் சித்தியை ஆய்வு செய்த முகுல் ஷர்மா, அங்கு கிராம பஞ்சாயத்து தேர்தலோ, கூட்டுறவு சங்கத் தேர்தலோ 25 வருடங்களாக நடை பெறவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘அரிஜன்கள்’ பற்றிய அன்னாவின் கருத்து என்ன தெரியுமா? “அது மகாத்மா காந்தியின் பார்வையோடு இணைந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு சமர், ஒரு சனர், ஒரு கும்கர் என்ற ஏற்பாடு இருக்க வேண்டும். அனைவரும் தத்தமது கடமையையும், வேலையையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அதனூடாக ஒரு கிராம சுயசார்பு தன்மையைப் பெறும். இதனைத் தான் நாங்கள் ரலேகான் சித்தியில் கடைப்பிடித்து வருகிறோம்.” எனவே, இந்த ‘குழு அன்னா’வுடன் ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள்’ மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்கள் இணைந்திருப்பது உங்களை ஆச்சிரியப்படுத்துகிறதா? என்ன.
இப்போராட்டத்தை கையிலெடுத்து நடத்தும் NGO க்கள் கோகோ கோலா மற்றும் லேமேன் பிரதர்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவி பட்டியலில் இருக்கின்றன. அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோர் குழு அன்னாவின் முக்கிய உறுப்பினர்கள். இவர்கள் நடத்தும் NGO-வான ‘காபிர்’ 4 லட்சம் டாலர்களை ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து கடந்த 3 வருடங்களில் பெற்றுள்ளது. ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ போராட்டத்தின் புரவலர்களாக அலுமினியன் ஆலை, துறை முகங்கள் மற்றும் SEZ அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இந்தியாவின் பெரிய நிறுவங்கள் உள்ளன. மட்டுமின்றி, இவர்களுக்கு இந்தியாவின் பெரிய நிதி சாம்ராஜ்யங்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் நடத்தும் பணமுதலை அரசியல்வாதிகளுடனும் தொடர்பு இருக்கிறது. அவர்களின் சிலர் ஊழல் மற்றும் இதர குற்ற நடவடிக்கைகளுக்காக விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த ஆதரவின், ஆர்வத்தின் பின்னணி தான் என்ன?
ஒன்றை நினைவில் நிறுத்துவோம், விக்கிலீக் அம்பலப்படுத்திய மோசடிகளை தொடர்ந்து சீரான முறையில் ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 2G ஸ்பெக்ட்ரம் வெளிப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், மூத்த இதழாளர்கள், அமைச்சர்கள், காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கில் கோடிகளை கொள்ளையடித்த நேரத்தில் ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றும் கோரிக்கை வலுப்பெற்றது. வரலாற்றில் முதல்முறையாக தொழில் தரகர்களாக பத்திரிக்கையாளர்களை இந்த நாடு கண்டது. ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை துவங்க சரியான நேரமாக இது அமைந்தது. இல்லையா?
அரசு தனது பாரம்பரியமான கடமைகளான குடிநீர் வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிலிருந்து இடம் பெயர்ந்துள்ளது. இந்தப் பணிகளை பராசுர நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் இப்போது செய்கின்றன. மக்களுடைய எண்ணங்களை வடிவமைக்கும் இடத்தில் பயங்கர அதிகாரமும், வீச்சும் கொண்ட கார்ப்பரேட் ஊடகங்கள் வந்திருக்கின்றன. இந்த விஷச் சுழலில் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் லோக்பால் சட்டவரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் இந்த ஜனலோக்பால் மசோதா முழுவதுமாக இவர்களுக்கு விலக்கு அளித்திருக்கிறது.
பெருங்குரலெடுத்து தீய அரசியல்வாதிகள், அரசு முறைகேடானது என்று கூச்சல் போட்டு மேற்படி நிறுவனங்களை மிகத் தந்திரமான முறையில் தப்பிக்க வழி வகுத்துள்ளார்கள். புனித பீடம் ஒன்றின் மீது ஏரி நின்று கொண்டு அரசை மட்டும் கொடூரமாகச் சித்தரித்து, அரசை மக்கள் அரங்கிலிருந்து முழுவதுமாக வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இரண்டாம் கட்ட சீர்திருத்தமாக கூடுதல் வேகத்தில் தனியார்மயமாக்கம், கூடுதலான முறையில் அடிப்படைக் கட்டுமானம் மற்றும் இந்தியாவின் இயற்கை வளங்களை சுரண்ட அழைப்புவிடுக்கிறார்கள். கார்ப்பரேட் ஊழல் முறைகேடுகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு அது ‘லாபியிங்’ கட்டணமாக பெயர் சூட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகவில்லை. 830 மில்லியன் இந்திய மக்கள் நாள் ஒன்றிற்கு ரூ 20 சம்பாதிக்கும் நிலையில் உள்ளார்கள். இவர்களை மேலும் வறிய நிலைக்கு நெட்டித் தள்ளி, இந்த நாட்டில் ஒரு உள்நாட்டு போரை உருவாக்கும் வகையில் அமைந்துள்ள கொள்கைகளால், மக்களுக்கு என்ன பயன்?
இந்த நெருக்கடி நிலை நாம் பின்பற்றி வரும் ஜனநாயத்தின் தோல்வி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல்களாகவும், பணக்கார அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் தகுதியை இழந்துள்ளனர். இதன் காரணமாக நிலுவையில் இருக்கும் எந்த ஜனநாயக அமைப்பும் மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. தேசியக் கொடி அசைப்பை பார்த்து ஏமாற வேண்டாம். சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் போர் பிரபுக்கள் நிகழ்த்திய போரை போன்ற ஒரு நிலையைத் தான் நாம் இப்போது இந்தியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.
சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.

வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.
கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.
இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.
மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள்.
இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும்? அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும். அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா? நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.
இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.
மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:
மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.
"அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?
அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்.
வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும் பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?
உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.
2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.
திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ் என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.
உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு , யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், ‘எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்’ என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், ‘பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்’ என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!
- (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)
நான் 1.10.2010 அன்று இளையங்குடியிக்கு சென்டிருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், ‘சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிரதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்’. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன. போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே! சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள். அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார். இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2) பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3) பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4) பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5) பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6) டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7) குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?

நல்லவர்களே, உங்களுக்குத்தான் இந்தச் செய்தி.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்.
நான் சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்; நல்ல பண்புள்ளவனாக வாழ வேண்டும்; எனது குடும்பத்தையும், என்னையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்; அதற்காக குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்; தூய்மையான உள்ளத்தோடு வாழ்ந்து சுவனம் சென்று விட வேண்டும். இதுதான் எனது ஆசை. அன்றி, ஆசைகளும் மோகங்களும் நிறைந்த உலகில் என்னால் எதிர்நீச்சல் போட முடியாது. உலகில் அவலங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு போரிட முடியாது. வெறும் உலக நலன்களுக்காக வாழ்பவர்களை ஒரு பொது நோக்கத்தின்பாலோ அல்லது ஒரு பொது நலனின்பாலோ ஒன்றிணைப்பதற்கு மல்லுக்கட்ட முடியாது. சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற இன்னோரன்ன விவகாரங்களில் ஈடுபட்டு சீர்திருத்தம் என்ற பெயரில் காலம் கடத்த முடியாது. முரண்பட்டக் கருத்துடையோரை இனக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதில் வெற்றியளிக்காத முயற்சிகளை மேற்கொண்டு நேரம் கடத்த முடியாது. மனித சமூகத்தின் பிரச்சினைகளையும், முஸ்லிம் சமூகத்தின் அவலங்களையும் பேசிப் பேசி காலம் தள்ள முடியாது. நீண்ட எதிர்காலத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற கற்பனையில் என்னால் வாழ முடியாது.
நான் சிலரைப் பார்க்கின்றேன்; அவர்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறார்கள். பெரும் பெரும் மனிதர்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்; உலகமெல்லாம் சுற்றிச் சுழன்று உழைக்கிறார்கள்; பெரிய பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள்; நிறையவே சாதிக்கலாம் என்கிறார்கள். எதிர்காலம் இப்படி இருக்கும், அப்படி இருக்காது என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். பெரும் ஆளுமைகளையெல்லாம் இழுத்து வளைத்து தங்களது கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள். அந்த ஆளுமைகளின் ஆதிக்கத்திற்குள் நான் விழுந்து விடுவேனோ என்று அவர்கள் அச்சப்படுவதில்லை. அவர்களின் பிரச்சினைகளைத் தமது பிரச்சினைகளைகளாக இவர்கள் வார்த்தெடுத்துக் கொள்கிறார்கள். “நீங்கள் பயப்பட வேண்டாம்; நாளை இன்ஷா அல்லாஹ் பிரச்சினை தீர்ந்து விடும்” என்கிறார்கள்.
எனக்கு இவ்வளவு தைரியம் வராது. தைரியம் இருந்தாலும் இந்தளவு சிரமம் எடுத்துக் கொள்ள நான் ஆர்வம் காட்ட மாட்டேன். இத்தகைய நகர்வுகளில் பயன் இருக்குமா? என்பதில் எனக்கு சந்தேகமே எழுகிறது. இதனை விட எனக்கும் எனது குடும்பத்துக்கும் எனக்கு இனக்கமானவர்களுக்கும் நன்மை செய்து விட்டுப்போவதே சாலச் சிறந்தது. இவ்வாறு சிந்திக்கும் ஒருவரைப் பற்றி உங்களது அபிப்ராயம் என்ன? இவர்களோடு நீங்கள் உடன்படுவீர்களா? முரண்படுவீர்களா? இவரது சிந்தனையை குர்ஆனோடும் நபிகளாரின் வாழ்க்கை முறையோடும் ஒப்பிட்டு உரசிப் பார்த்தால் அதனை ஏற்க முடிகிறதா? மேலே படிப்பதற்கு முன் ஒரு முறை உங்களோடு இந்த விஷயங்களைப் பேசிப் பாருங்கள். இந்த வினாக்களை உங்களை நோக்கிக் கேட்டுப் பாருங்கள். உங்கள் பதில் என்ன என்பதை சிந்தனைக்கு எடுத்த பின் மேலே படியுங்கள்.…… …… …. ??
உங்களது பதில் உங்களுக்குக் கிடைத்து விட்டதா? அவ்வாறாயின் தொடருங்கள்.
மேலே கூறப்பட்டவர்கள் நல்ல மனிதர்கள்; சுவர்க்கத்தை ஆசிக்கிறார்கள்; நரகத்தை அஞ்சுகிறார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் படிக்கிறார்கள். தன்னையும் தனது குடும்பத்தையும் இன்னும் சில இணக்கமான மனிதர்களையும் நல்வழிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அப்படித்தானே? எனினும், உலகத்தைக் கெட்டவர்களின் கைகளில் கொடுத்து விட்டுத் தூர நின்று கொள்கிறார்கள். கெட்டவர்களின் அருகில் நிற்கவும் இவர்கள் அஞ்சுகிறார்கள். மாற்றங்களைக் கனவு காணவும் இவர்கள் பயப்படுகிறார்கள். பெரிய விஷயங்களைப் பேசுவோரை இவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்கள். பெரும் பெரும் மனிதர்களோடுள்ள சகவாசத்தை வெறுக்கிறார்கள். இறுதித் தூதரின் மனப்பாங்கோடும் சிந்தனையோடும் அன்னாரது நடமுறைகளோடும் இந்தப் போக்கு ஒத்துப் போகிறதா? உங்களால் இதனை ஏற்க முடிகிறாதா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனப்பாங்கும் சிந்தனையும் எப்படி இருந்தது?
அது மக்காவில் இஸ்லாத்தைப் போதித்த சோதனை மிக்க காலம். உலகில் ஏதேனும் ஒரு சாதனையை நிலை நாட்ட எண்ணுவது எப்படிப் போனாலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கே உத்தரவாதமில்லாத காலம். இஸ்லாமும் முஸ்லிம்களும் பலமில்லாது இருந்த காரணத்தால் இம்சைக்குட்படுத்தப்பட்ட காலம்.
நபித்தோழர் கப்பாப் இப்னு அரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளால் இம்சைக்குள்ளாக்கப்பட்டு கஃபாவை நோக்கி வருகிறார். அங்கு அமர்ந்திருந்த இறைத் தூதரை அவர் காண்கிறார். தனது நொந்து போன இதயத்தை நபிகளாரின் துஆவினால் வருடிக் கொள்ள நினைத்தாரோ என்னவோ, இறைத்தூதரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார்:”அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக உதவி கேட்டு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்கக் கூடாதா?”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்பாப் அவர்களை அமர வைத்து தானும் அவர் முன்னால் அமர்ந்தார்கள்; அமர்ந்தவர்கள் துஆ செய்யவில்லை. ஒரு கதை சொன்னார்கள்.”கப்பாப்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இதனைவிட அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு மனிதர் நிலத்தில் நடப்பட்டார். அவரது உடல் இரண்டு துண்டங்களாக வெட்டப்படும். அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட மாட்டார். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு மனிதன் (மற்றுமொரு அறிவிப்பில் ஒரு பெண் என்றுள்ளது) தனிமையில் பயணம் செய்வான்; அவனது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது. சில போது அவனது ஆடுகளை ஓநாய் தாக்கும் என்ற அச்சம் இருக்கலாம்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இந்த சம்பவம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனப்பாங்கையும் கனவையும் சிந்தனையையும் கோடிட்டுக் காட்டுகிறதல்லவா? மக்காவில் இருக்கின்ற நபி, தனக்கருகில் இருக்கின்ற உடனடிப் பிரச்சினைகளில் ஒன்றையேனும் அப்போதைக்கு தீர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் தான் போதிக்கும் ஏகத்துவத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்த கற்சிலைகளில் ஒன்றைக் கஃபாவிலிருந்து இறக்கவும் முடியாது; கப்பாபை அடித்த சமூகத்திடம் போய் நீதி கேட்கவும் முடியாது. இந்நிலையில் தெற்கே ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த சன்ஆ – ஹழ்ர மௌத்திற்கிடைப்பட்ட பிரதேசத்தை அமைதிப் பிரதேசமாக்கும் ஒரு காலம் குறித்துப் பேசுகிறார்கள்.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக அக்காலம் வரும்” என்று நம்பிக்கையோடு உறுதிபடக் கூறுகிறார்கள். ஏனைய இடங்களைக் குறிப்பிடாமல், ஏன் சன்ஆ, ஹழ்ர மௌத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிட வேண்டும்? வரலாறு சொல்கிறது; அக்காலத்தில் அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்பட்ட பிரதேசம் அரேபியாவில் அங்குதான் இருந்தது. அந்தப் பிரதேசத்தை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அமைதிப் பிரதேசமாக மாற்ற வேண்டும் என கனவு காண்கிறார்கள். அதனை சாதிக்கும் காலம் குறித்து நன்மாராயம் சொல்கிறார்கள். மக்காவில் திரும்பிய திசைகளிலெல்லாம் அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததொரு காலத்தில் இத்தகையதொரு சாதனை குறித்து நினைத்துப் பார்க்க மனம் வருமா? வருவது சாத்தியமில்லைதான், எனினும், அந்த அற்புத மனிதரின் உள்ளத்தில் அந்த சாதனை நிழலாடியது.
அந்த சாதனை உணர்வை தனது தோழரிடத்திலும் அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள். இன்றும் அவ்வாறான நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை சில நல்ல மனிதர்களும் அனுதாபத்தோடுதான் நோக்குகிறார்கள். அல்லது ஏளனமாகப் பார்க்கிறார்கள். 150 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களிடத்தில் இத்தகையதொரு கனவு, நம்பிக்கை இல்லாமல் போனது ஆச்சர்யமில்லையா? அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நம்பிக்கை மிக உறுதியாக இருந்தது. இன்று ஏன் அந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் தளர்ந்து போனது? ஆராய்ந்தால் இரண்டு காரணங்கள் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
நல்லவர்கள் தங்களது பொறுப்புக்களை தனக்கு இணக்கமானவர்கள், நெருக்கமானவர்களோடு சுருக்கிக் கொண்டார்கள். கெட்டவர்களின் கைகளில் உலகைக் கொடுத்து விட்டு அவர்கள் ஒதுங்கி விட்டார்கள்.
முஸ்லிம் சமூகத்தையும் அதற்கப்பாலிருக்கின்ற மனித சமூகத்தையும் சிறந்த குறிக்கோள்களின்பால் இணைத்து செயல்படலாம் என்பதை அதிகமானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அல்லது அவ்வாறு இணைந்து செயல்படுவதைப் பிழை என்று நம்பி இருக்கிறார்கள். அதனால் நட்டாற்றில் தனித்து விடப்பட்ட உணர்வே அவர்களை மிகைத்திருக்கின்றது. சாதனைப் பற்றி அவர்கள் கற்பனை கூடச் செய்ய முடியாது.
இங்கு சாதனைக் குறித்து நிராசை அடைந்துள்ள ஒரு சாராரைப் பற்றி நான் கூற முயற்சிக்கவில்லை. அவர்கள் இணைந்து செயல்படுவதில் நம்பிக்கயற்றவர்கள் மட்டுமல்ல, “நிச்சயமாக இணையவே மாட்டோம்; இணைந்து செயல்படுவோரை இணக்கமாக இருக்கவும் விட மாட்டோம்” என்று கங்கணம் கட்டியிருப்பவர்கள். அவர்களது பார்வையில் நபிகளார் கண்ட கனவுகள் யாவும் வெறும் கானல் நீரே. அதனை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.
இந்தத் தலைப்பு அவர்களுக்காக எழுதப்பட்டதல்ல. முஸ்லிம் சமூகமும் அங்குள்ள நல்ல மனிதர்களும் படிப்பினை பெறுவதற்காகவே இது எழுதப்படுகிறது. இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு இணக்கமானவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் மத்தியில் தனது பொறுப்புக்களைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவ்வாறு சுருக்கி இருந்தால் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள சன்ஆ பற்றி அவர்கள் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தனிமையிலிருந்தாலும் பொறுப்பைப் பாரியதாகக் கருதினார்கள். பரந்து விரிந்த ஓர் உலகின் சுபிட்சத்தை அவர்கள் விரும்பினார்கள். இந்த விருப்பத்தை வாசித்து பார்க்கவும் அவர்களால் முடிந்தது. அதனால்தான் அவர்களது உள்ளத்தில் நம்பிக்கைச் சுடர் அணையாது பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அது என்ன வாசிப்பு?முரண்பட்டவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கும் போது இணக்கப்பாட்டைக் கொண்டு வரலாம். ஒரு நீண்ட அல்லது குறுகிய குறிக்கோளின் பக்கம் அவர்களை இணங்கச் செய்யலாம்; அப்போது சாதிக்கலாம். சமுதாய வாழ்வின் சுன்னாவை இவ்வாறு படித்து வாசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தான் சாதிக்கலாம் எனும் தைரியம் வரும். குறைஷித் தலைவர்களோடு ஒரு விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடன்படவில்லை. அதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்கள். அதுதான் “நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்” என்பதாகும். எனினும், “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்” என்பதில் அவர்கள் அப்போதைக்கு உடன்பட்டார்கள். நான் உங்களிடம் இரத்த உறவைத் தவிர, வேறு எதனையும் கேட்கவில்லை என்ற வேண்டுகோளின் மூலம் உறவில் உள்ள உடன்பாட்டை அவர்கள் விரும்பினார்கள்.
அதனால்தான் அபூதாலிஃப் பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக அவரது கோத்திரமும் சேர்ந்து (இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும்) பகிஷ்கரிப்பை ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமல்ல, தனது உன்னத பண்பாடுகள் மூலம் ஏகத்துவத்தை மறுத்த அனைவரோடும் மனித நேயம் எனும் உறவைப் பேணி அவர்கள் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் மன்னன் ஹிர்கல் நபிகளாரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு அப்போதைய எதிரியாக இருந்த அபூசுஃப்யான் நபிகளார் பற்றிய உண்மையான தகவல்களை மறைக்காமல் கூற வேண்டியிருந்தது. ஏகத்துவத்தை மறுத்தவர்களோடு பேணி வந்த இந்த மூன்று உடன்பாடுகள் காரணமாகவே சாதிக்கும் தனது பாதையில் தடைக் கற்கள் ஏற்படாது அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இது மக்காவில்…மதினாவுக்குச் சென்ற போது அங்கு அன்னாரோடு முரண்பட்ட இரு சமூகங்கள் இருந்தன.
1. யூதர்கள்: இவர்கள் நபிமார்களோடு போரிட்டவர்கள். நபிமார்களைக் கொலை செய்தவர்கள். அத்தகையவர்களோடும் நபியவர்கள் உடன்பாட்டுக்கு வந்தார்கள். ‘மதினா சாசனம்’ அவர்களோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். சுமார் 50க்கும் அதிகமான ஷரத்துக்கள் அதிலிருந்தன. மதினாவின் பாதுகாப்பு யூதர்களினதும் முஸ்லிம்களினதும் பாதுகாப்பு என்பன உள்ளிட்ட உடன்பாடுகள் அதில் நிறைய இருக்கின்றன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் உடன்பாடுகளும் இணக்கமும் அன்னாருக்குத் தேவைப்பட்டன. குர்ஆன் அவர்களை, ‘வேதத்தை உடையவர்களே!’ என்று கண்ணியம் கொடுத்து அழைத்தமை; நாங்களும், நீங்களும் வேதம் சுமத்தப்பட்டவர்கள் என்ற உடன்பாட்டை வலியுறுத்துவதாக இருக்கவில்லையா?
2. நயவஞ்சகர்கள்: இவர்கள் வெளிப்படையில் முஸ்லிம்களாகவும் அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் எதிரிகளாகவும் இருந்தனர். இவர்கள் யார் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இனங்காட்டி இருந்தான். அத்தகையவர்களின் பெயர்களை நபியவர்கள் வெளியிடவில்லை. ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாத்திரம் நயவஞ்சகர்களின் பெயர் பட்டியலை நபியவர்கள் வழங்கியிருந்தார்கள். அவர்களும் அதனை வெளியிடவில்லை. அந்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் நபித் தோழர்களிடம் இருக்கவில்லை. மாறாக, நான் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளேனா? என்ற கவலைதான் அவர்களிடம் இருந்தது.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நெருங்கி நானும் அந்தப் பட்டியலில் ஒருவனா? என்று விசாரித்துக் கொண்டார்கள். “இல்லை” என்றவுடன் திருப்தியடைந்தார்கள். இஸ்லாமிய இன்பப் பயணத்திற்கு இத்தகைய உடன்பாடுகள் இன்றியமையாதவை என்பதை அண்ணலாரின் முன்மாதிரிகளிலிருந்து படிக்காதவர்கள் இஸ்லாமியப் பணி செய்வதற்கு அருகதையற்றவர்கள்.
இவை மட்டுமா? சிறிய சிறிய கோத்திரங்களோடு எண்ணிலடங்காத உடன்படிக்கைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கூட. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் இஸ்லாத்தின் அடிப்படைகள் எழுத்தில் வருவதைக் கூட விரும்பாத அந்தக் குறைஷிகளோடு அத்தனை உடன்பாடுகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வந்தார்கள். ஏன்? அதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் காண விரும்பும் பாதையின் இயல்பு என்பதை அன்னார் அறிந்திருந்தார்கள். பேரரறிஞர்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் நரகத்திற்கு அனுப்பி விட்டுத்தான் உலகில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லவர்கள் கூட நபியவர்களின் இந்த முன்மாதிரியைப் புரியாமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நல்லவர்களே, உங்களுக்குத்தான் இந்தச் செய்தி.

இஸ்லாமும் கம்யுனிசமும் ஒரு சிறிய பார்வை


இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றதுஎல்லாகாலங்களுக்கும்எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகட்ட வல்லமார்க்கம்கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய செயலிழந்து ஒருவித மந்தநிலையில் இருந்து வருவதால் இஸ்லத்தின் பொருளாதாரச் சட்டங்களும்செயலற்றவைகளாக இருந்து விட்டன.

அப்படியானால் ஏன் நாம் நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திட இஸ்லாத்தையும்,நமதுபொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிஸத்தையும் பின்பற்றக் கூடாது?அப்படி செய்வதனால் கம்யூனிஸம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாயஅமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையே பாதிக்காது.

இதனால் நாம் நமது ஒழுக்கப்பண்புகள்நமது சமுதாய நடைமுறைகள்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும்அதே நேரத்தில் நமதுபொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொருகொள்கையும் கொண்டவர்களாக திகழலாம்.
இப்படி ஒரு கருத்தை எடுத்து வைத்து முஸ்லிம்களிடையே சபலத்தை ஏற்படுத்துவதுகம்யூனிஸ்டுகளின் நீண்ட கால சூழ்ச்சியின் நவீன கண்டுபிடிப்பாகும்.

முதலில் அவர்கள் கீழை நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல்வேறுசந்தேகங்களை ஏற்படுத்தி இஸ்லாத்தை எதிர்த்திட தலைப்பட்டனர்இதனால்முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின்பால் இருந்த பிடிப்பு அதிகரித்திடவே செய்தது இதைகண்ட கம்யூனிஸ்ட்கள்  தங்களுடைய தக்குதலை பசப்பு வார்த்தைகளால் திசைதிருப்புகிறார்கள்.

கம்யூனிஸம் என்பது சமுதாயத்தில் நீதியை நிலை நாட்டுதல் என்பதன் மற்றொருபெயரேயாகும்.கம்யூனிஸம்அரசு தனது குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளைபூர்த்தி செய்திட கடமைப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது,இஸ்லாம்இவற்றையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லுகின்றது.ஆகவே கம்யூனிஸம்இஸ்லாத்தின் எதிரியல்ல.

இஸ்லாம் கம்யூஸத்தின் எதிரி என்று சொன்னால்,இஸ்லாம் சமுதாயத்தில் நீதியைநிலைநாட்டிட விரும்பவில்லை என்று பொருளாகிவிடும்இப்படி யாராவதுசொல்வார்களாநிச்சயமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட எந்தக்கொள்கையையும் இஸ்லாம் எதிர்ப்பதில்லை.

இப்படி பசப்பு மொழி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள் கம்யூனிஸ்ட்கள்.
இத்தகைய ‘சூழ்ச்சிவாதம்’ இதற்கு முன்னால் ஏகாதிபத்தியவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டதேயாகும்இந்த ஏகாதிபத்தியவாதிகளும்முதலில் இஸ்லாத்தின் மீதுஎதிர்ப்புக் கணைகளையே எடுத்து வீசினார்ஆனால் அவை முஸ்லிம்களைசலனப்படுத்தவில்லை

மாறாக முஸ்லிம்கள் தங்களை இதுபோன்ற பிதற்றல் வாதங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தலைப்பட்டனர்.தங்களுடைய எதிர்ப்புவாதம் எடுபடாமல் போகவே அவர்கள்வேறு விதமாக சூழ்ச்சியைத் திருப்பினர்
அப்போது அவர்கள் மேற்கொண்ட தந்திரவாதம் இதுதான்:மேலை நாடுகள் கீழைநாடுகளில் சிறந்ததொரு கலாச்சாரத்தை பரப்பிடவே முனைகின்றனஇஸ்லாம்எவ்வாறு கலாச்சராத்தை –நல்ல  பண்பாட்டை எதிர்க்கும்அதுதான் பண்பாட்டின்பாசறையாயிற்றே” இதோடு அவர்கள் விடவில்லை.


நீங்கள் இந்த மேலைநாட்டு நாகரிகத்தை கடைப் பிடியுங்கள்.அதே நேரத்தில் நீங்கள்உங்கள் மதம் விரும்புவது போல் நோன்பிருங்கள்தொழுகையும் நிறைவேற்றுங்கள்என்றும் சொன்னார்கள்.
ஒரு முறை இந்த முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தினுள்வந்துவிட்டார்களேயானால்அவர்கள் தங்களது மதத்தை மறக்கஆரம்பித்துவிடுவார்கள்காலப்போக்கில் முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தில்மூழ்கி இஸ்லாத்தை மறந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம்.இதையேஅவர்கள் நிறுபித்துக் காட்டினார்.

இதன் விளைவாக காலப்போக்கில் இஸ்லாம் என்றால் என்ன எனபதையே தெரியாதஒரு தலைமுறை தோன்றியதுஇவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியுமுன்னேஎந்தக்காரணமும் இல்லாமல் இஸ்லாத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.

இதே சூழ்ச்சி முறையைத்தான் கம்யூனிஸ்ட்கள் இன்று பின்பற்றிட முயற்சிக்கின்றனார்அவர்கள் சொல்லுகிறார்கள்முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருக்கட்டும்;தொழுகைகையை நிறைவேற்றட்டும்நோன்பிருக்கட்டும்இன்னும் இதுபோன்றகடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்நோன்பிருக்கட்டும்;இன்னும் இது போன்றகடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்கம்யூனிஸத்தை அவர்களின்பொருளாதாரக் கொள்கையாக மட்டும் ஏற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் கம்யூனிஸம்எந்த விதத்திலும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்லஅப்படி இருக்க முஸ்லிம்கள்கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

முஸ்லிம்கள் ஒரு முறை கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வார்களேயானால்,காலப்போக்கில் அவர்கள் கம்யூனிஸத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடுவர்அதன் மூலம்இஸ்லாத்தையும் இஸ்லாம் இந்த உலகில் சாதிக்க விரும்பும் இலட்சியத்தையும்மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள்ஏனெனில் நாம் வாழும் உலகம் விரைவானமாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறதுஅதில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.அதில் பெரிய மாற்றங்களைக் கூடச் செய்வதற்கு சிறிதளவு காலமேபோதுமானது.

இதைத் தெரிந்திருந்தும்சில முஸ்லிம்கள் தங்களை கம்யூனிஸத்திற்குஅடிமைப்படுத்திக் கொண்டார்கள்ஏனெனில் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்வதன்மூலம் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைதவிர்த்துக் கொள்ளலாம்.தாங்கள் சிந்தனையில் ஈடுபடதேவை இல்லைசிலஇலட்சியங்களை நோக்கி நடப்பதில் ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆளாவதிலிருந்துதவிர்ந்துக் கொள்ளலாம்.

இன்னும் இதுபோன்ற மனோ நிலையைக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு இடத்தில்உட்கார்ந்து கொண்டு கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நாடுகின்றனர்தாங்களே சிந்தித்துதங்களது வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக தங்களை அடுத்தவர்கள் வழிநடத்தட்டும் என்று வாளா இருந்து விடுகின்றனர்.

இங்கே நாம் ஒன்றைக் கவணிக்கவேண்டும்அதாவது இஸ்லாம்தனதுகொள்கைகளுக்கு எதிராக இல்லாத கொள்கைகளை  எதிர்ப்பதில்லை.
உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்லஓரிருவிஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும்உண்மையில் அதுஇஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்ல.

தங்களிடம் ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் முஸ்லிம்கள்,கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோஏற்றுக்கொள்ள தேவை இல்லை. இவைகள் ஓரிரு விஷயங்களில் இஸ்லாத்தைப்போல்காட்சியளிப்பினும் சரியே!

இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள்தான்பாவிகளாவார்கள்”(அல்குர்ஆன் 5:47)

நாம் உண்மையிலேயே கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ளலாமா?
அப்படி அதை ஏற்றுக்கொண்ட பின்னரும் முஸ்லிம்களாக வாழலாமாவாழ முடியுமா?